search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் துறை"

    • வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு அறை எண் 439, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
    • எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 28.10.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 28-ந் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இந்த முகாமைகலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தகுதி மிக்க வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண் 439, 4 வது தளம் மற்றும் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகிய இரண்டு இடங்களில் நாளை 22-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலைத் தேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து புதுப்பித்துக்கொள்ளலாம். தகுதி மிக்க வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜோதி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    இதில் 124 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வக்கீல் கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வில்லியம்ஸ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது.
    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 25 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை விருதுநகர், சிவகாசி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 10-ந் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×